You are here

திரைச்செய்தி

‘வேலைக் காரன்’

சிவகார்த்திகேயனும் நயன் தாராவும் நடித்த ‘வேலைக் காரன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ‘ஸ்டுடியோ க்ரீன்’ தயாரிப்பில் இவர்கள் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார் கள். கடந்த சில நாட்களாக இருவர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு ஐரோப்பா கண்டத்தில் உள்ள அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு சில காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படுகின்றன. இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன் தாராவின் மனம் கவர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே சிவகார்த்தி கேயன் முதன்முதலாக தயாரித் திருக்கும் ‘கனா’ படம் இவ்வார இறுதியில் வெளியாக இருக் கிறது.

தீபிகா படுகோன்: முத்தக் காட்சியில் நடிப்பேன்

திருமணமாகிவிட்டதால் முத்தக்காட்சிகளில் நடிப்பீர்களா என்று தீபிகாவிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாலிவுட்டின் கனவுக் கன்னிகளான தீபிகா படுகோனும் பிரியங்கா சோப்ராவும் திருமணம் செய்துகொண்டதால் பாலிவுட் திரையே தற்பொழுது சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. நடிகை தீபிகா படுகோனும் நடிகர் ரன்வீர் சிங்கும் கடந்த மாதம் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு ரன்வீர் சிங் தனது ‘சிம்பா’ பட விளம்பர நிகழ்ச்சிகளில் மும்முரமாக இருக்கிறார். தீபிகா புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள் ளார்.

இயக்குநர் அருண்ராஜாவை பாராட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கனா’ படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது இப்படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜை வெகுவாகப் பாராட்டினார் படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். தன்னுடைய தந்தை இப்போது இருந்தால் நடிகர் சத்யராஜ் போன்றுதான் இருப்பார் என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார் அவர். “என் தந்தையின் ஸ்தானத்தில் வைத்துதான் சத்யராஜ் சாரைப் பார்க்கிறேன். அவர் அந்தளவுக்கு பாசமாகப் பழகுவார். இந்தப் படத்துக்காக நான் கடுமையாக உழைத்திருப்பதாகப் பலரும் பாராட்டு கின்றனர்.

வர்மக்கலை கற்றுக்கொள்ளும் காஜல்

‘இந்தியன்-2’ படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிப்பது தெரிந்த சங்கதி. அந்தப் படத்துக்காக இப் போதே அவர் மெனக்கெட ஆரம்பித்துவிட்டார் என்பது புதுத் தகவல். வேறொன்றுமில்லை, இப்படத்துக்காக வர்மக் கலையைக் கற்று வருகிறாராம் காஜல். ‘இந்தியன்’ முதல் பாகத்தில் வர்மக் கலை மூலம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் கமல். இந்த இரண்டாம் பாகத்தில் அதே வேலையைக் காஜல் செய்வார் போலிருக்கிறது. குறுகிய காலத்தில் வர்மக் கலையை மேலோட்டமாகக் கற்றுக் கொள்ளுங்கள் என்று இயக்குநர் சங்கர் படநாயகி காஜல் அகர் வாலுக்கு அறிவுறுத்தினாராம்.

இந்தி இயக்குநர் ரோகித் மிட்டலை கரம்பிடித்த சுவேதா பாசு

இந்தி திரையுலக இயக்குநரான ரோகித் மிட்டலை கைபிடித்துள்ளார் நடிகை சுவேதா பாசு. ‘ரா ரா’, ‘ஒரு முத்தம் ஒரு யுத்தம்’, ‘மை’, ‘சந்தமாமா’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சுவேதா பாசு, சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். இடையில் திரை வாய்ப்புகள் குறைந்திருந்த நேரத்தில், பாலி யல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர், சில நாட்கள் மகளிர் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார். தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று அவர் விளக்கம் அளித்த நிலையில், மீண்டும் திரை வாய்ப்புகள் தேடி வந்தன. இந்நிலையில் இவருக்கும் ரோகித் மிட்டலுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

சிம்புவின் குத்துப் பாடலுக்கு அமோக ஆதரவு

நடிகர் சிம்பு பாடியுள்ள ‘நான் ஒரு வார்த்தை சொன்னா உன் மதம் காலி’ என்ற பாடல் இணையத் தளத்தில் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வலம் வருகிறது. சிம்புவுக்கு நடிப்பு மட்டுமின்றி நடனம், இசை ஆகியவற்றிலும் ஆர்வம் அதிகம் உள்ளவர். அதனால் அடிக்கடி இசை ஆல்பங்களை வெளியிடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி, ரமேஷ் தமிழ் மணி கூட்டணியில் உருவாகியுள்ள ‘பெரியார் குத்து’ என்ற ஆல்பத்தை ‘ரெபல் ஆடியோ’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அடங்க மறுக்கும் நாயகி

பாலிவுட், தெலுங்கு திரைகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ரா‌ஷி கண்ணா. ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் அடுத்தடுத்து மூன்று படங்களைத் தன் கைவசம் வைத்துள்ளார். ரா‌ஷி கண்ணாவின் முதல் படமான ‘மெட்ராஸ் கபே’ அவருக்கு விமர்சன ரீதியில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. ரா‌ஷி கண்ணாவின் முதல் மலையாளத் திரைப்படம் ‘வில்லன்’. ‘மெட்ராஸ் கபே’ படத்திற்குப் பின் இவருக்கு தெலுங்குப் பட வாய்ப்புகள் அதிகம் வந்தன. இவர் தற்பொழுது தமிழில் ஜெயம் ரவியுடன் நடித்திருக்கும் ‘அடங்க மறு’ படம் டிசம்பர் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.

எனக்குப் பிடித்த நடிகை கஜோல்

‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ்த் திரைக்கு அறிமுகமானவர் சஞ்சிதா ஷெட்டி. பல படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ஸ்டைலும் பஞ்ச் வசனமும் மிகவும் பிடிக்குமாம். அவர் நடித்திருக்கும் ‘பேட்ட’ படத்தின் முதல் காட்சியைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார் சஞ்சிதா ஷெட்டி.

சஞ்சிதா ஷெட்டி தற்பொழுது நடிகர் பிரசாந் துக்கு ஜோடியாக ‘ஜானி’ என்னும் தமிழ் படத்தில் நடித்து அந்தப் படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

விஜய் சேதுபதியை எரிச்சல் படுத்திய செய்தியாளர்

விஜய் சேதுபதியை எரிச்சல் அடைய வைத்த செய்தியாளரின் தொடர் கேள்விகள். கோபத்துடன் ஆனால் நிதானமாக பதில் கூறிய சேதுபதி.

 

பரியேறும் பெருமாள் உரிமத்தைப் பெற்றது விஜய் தொலைக்காட்சி

கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. நீலம் ‘புரொடக்சன்ஸ்’ சார்பில் பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படத்தில் பரியேறும் பெருமாளாக சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார். கதிர் ஜோடியாக கயல் ஆனந்தியும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ளனர்.

Pages