You are here

விளையாட்டு

ரொனால்டோ இல்லாத தவிப்பில் ரியால் மட்ரிட்

எஸ்டோனியா: கிரிஸ்டியானோ ரொனால்டோவும் ரியால் மட்ரிட்டுக்கு சென்ற காற்பந்துப் பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை பெற்று தந்த அதன் நிர்வாகியான ஸினடின் ஸிடானும் இல்லாத ரியால் மட்ரிட் குழு சூப்பர் கிண்ண இறுதிப் போட்டியில் தடுமாறி அட்லெட்டிகோ மட்ரிட்டிடம் நேற்று தோல்வியை தழுவியது. நேற்றைய ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அட்லெட்டிகோ மட்ரிட்டின் டியேகோ கோஸ்டா கோலடித்து ரியாலை திணற வைத்தார்.

‘பாண்டியா ஆல்ரவுண்டரா?’

புதுடெல்லி: விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக் கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரு கிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் போராடி தோற்றது. 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்ட வித்தியாசத்தில் மோசமாக தோற் றது. தொடர் தோல்வி குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

18வது ஆசிய விளையாட்டுப் போட்டி: ஜகார்த்தாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நடைபெறும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ரசிகர்கள் ஜகார்த்தாவில் குவிந்து உள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டி நாளை மறுதினம் சனிக்கிழமை முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த 1951ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தப் போட்டியை அப்போது இந்தியா முதன்முறை யாக ஏற்று நடத்தியது. இறுதிச் சுற்றுக்கு செல்வோரை நிர்ணயிக்க காற் பந்து, கூடைப்- பந்து, சுவர்ப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவு- களில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஏற்கெனவே தொடங் கிவிட்டன.

டென்னிஸ்: செரினா எதிர்பாராத தோல்வி

சின்சினாட்டி: அமெரிக்காவின் சின்சினாட்டியில் நடைபெற்று வரும் பொது விருதுப் போட்டியின் இரண்டாவது சுற்றில், உலகத் தரவரிசையில் முன்பாக முதலிடம் பிடித்திருந்த செரினா வில்லியம்ஸ் செக் வீராங்கனை பெட்ரா குவிட்டோ- வாவிடம் தோல்வியுற்றார். அவர் 6=3, 2=6, 6-=3 எனும் செட் கணக்கில் எதிர்- பாராத விதமாக தோல்வியைத் தழுவினார். ஏற்கெனவே சின்சினாட்டி விருதை இரு முறை வென்ற 36 வயது அமெரிக்கரான செரினா, கடந்த ஆண்டு குழந்தை ஈன்றெடுத்தார். இதனால் குழந்தைபேற்றுக்கு பிந்திய மனச்சோர்வால் தாம் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்.

ராமோஸ்: லிவர்பூல் தோல்விக்கு நான் காரணம் அல்ல

டாலின்: லிவர்பூல் அணி, முக்கிய காற்பந்து ஆட்டங்களில் தோல்- வியைத் தழுவியதற்கு அதன் பயிற்றுவிப்பாளர் யர்கன் குளாப்பே காரணம் என்று ரியால் மட்ரிட் அணித் தலைவரும் தற்காப்பு ஆட்டக்காரருமான செர்ஜியோ ராமோஸ் குறைகூறியுள்ளார். அண்மைக் காலமாகவே இரு- வருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இவ்வாண்டு மே மாதம் லிவர்- பூலுக்கும் ரியால் மட்ரிட்டுக்கும் இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றுப் போட்டியில் ரியால் 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது. இந்த ஆட்டத்தில் லிவர்பூலின் தாக்குதல் ஆட்டக்காரர் முகமது சாலாவின் மீது ராமோஸ் இழைத்த தவற்றினால் சாலாவுக்கு தோள் பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டது.

எஃப்1: ஓய்வுபெறும் ஃபெர்ணான்டோ அலோன்சோ

லண்டன்: எஃப்1 கார்ப் பந்தயத்தில் இரு முறை உலக வெற்றியாளர் பட்டத்தை வென்ற ஸ்பெயின் வீரரான ஃபெர்ணான்டோ அலோன்சோ, இந்த நடப்பு பருவத் தின் இறுதியில் ஓய்வுபெற இருப்ப தாக அவரது மெக்லேரன் குழு அறிவித்துள்ளது. “இந்த அற்புதமான விளை யாட்டில் 17 ஆண்டுகள் கழித்த பிறகு நான் புதிய மாற்றத்தைச் சந்திக்க விழைகிறேன். இருப் பினும், இந்தப் பருவத்தில் நான் முழு ஈடுபாட்டுடன் விளையாடி விடைபெறுவேன்,” என்றார் அவர்.

கோஹ்லி, சாஸ்திரிக்கு நெருக்குதல்

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து இந்திய வீரர்கள் கடுமையாக விமர்சிக் கப்படுகின்றனர். அதிலும், அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கும் அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்கும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்த வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு தற்போது இந்திய அணியின் செயல்பாட்டை மிக அணுக்கமாகக் கவனித்து வருகிறது. இந்திய அணியின் ஆக அண்மைய செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என நிர்வாகக் குழு கூறியுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் குற்றமற்றவர்

லண்டன்: இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள மதுபானக்கூடத்துக்கு வெளியே நடந்த சண்டை தொடர்பான வழக்கில் அந்நாட்டின் கிரிக்கெட் நட்சத்திரமான பென் ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்தக் கைகலப்பு நிகழ்ந்தது. தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பென் ஸ்டோக்ஸ் மறுத்ததை அடுத்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. பிரிஸ்டல் கிரௌன் நீதிமன்றத்தில் ஆறு நாள் வழக்கு விசாரணை நடைபெற்றது. சம்பவம் நடந்தபோது ஸ்டோக்ஸ் குடிபோதையில் இருந்ததாகவும் கோபத்தின் உச்சத்தில் இருந்ததாகவும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.

அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் டாவிட் சில்வா

மட்ரிட்: அனைத்துலகக் காற்பந்துப் போட்டி களிலிருந்து ஸ்பெயின் குழுவின் டாவிட் சில்வா (படம்) ஒய்வுபெற்று உள்ளார். இங்கிலிஷ் பிரிமியர் லீக் நடப்பு வெற்றி யாளரான மான்செஸ்டர் சிட்டியில் அவர் தொடர்ந்து விளையாடு வார். 2008ஆம் ஆண்டி லிருந்து 2012ஆம் ஆண்டு வரை ஸ்பெ யின் மூன்று பிரதான பட்டங்களை அடுத் தடுத்து வென்றது. ஸ் பெ யி னு க் கு ப் பெருமை சேர்த்த அக்குழுவில் சில்வாவும் இடம்பெற்றிருந்தார். ஸ்பெயினுக்காக விளையாடி உலகக் கிண்ணம் மற்றும் ஐரோப்பிய கிண்ணத்தை வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் சில்வா.

மண்ணைக் கவ்வியது இந்திய அணி

லண்டன்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் இந்தியா படு தோல்வியைச் சந்தித்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ஓட்டங்கள் எடுத்தது. இங்கி லாந்து 7 விக்கெட்டுகளுக்கு 396 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 289 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்தியா 130 ஒட்டங்களுக்குள் சுருண்டது. மழை காரணமாக ஆட்டம் இருமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.

Pages