You are here

இந்தியா

திமுகவில் சேர்ந்தார் செந்தில் பாலாஜி

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று வரை டிடிவி தினகரனின் ஆதரவாளராக தம்மை அடையளப்படுத்திக் கொண்டார் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தினகரன் துணைப் பொதுச்செயலாளராக உள்ள அமமுகவில் இருந்து திடீரென விலகி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியில் இணையும் நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த இணைப்பின் மூலம் மக்களின் விருப்பத்தை, தாம் நிறைவேற்றி இருப்பதாகக் குறிப்பிட்டார்.

நடுவானில் பாலியல் தொல்லை: தமிழ்நாட்டு ஆடவருக்கு ஒன்பது ஆண்டு சிறை

தமிழ்நாட்டைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒரு வருக்கு அமெரிக்காவில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் விமானத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக பிரபு ராமமூர்த்தி, 35, (படம்) என்னும் அவருக்கு டெட்ராய்ட் நீதிமன்றம் நேற்று முன்தினம் இந்த தண்டனையை அறிவித்தது. லாஸ்வேகாஸ் நகரில் இருந்து டெட்ராய்ட்டுக்கு இரவு நேரத்தில் ராமமூர்த்தி தமது மனைவியுடன் விமானப் பயணம் மேற்கொண் டார். அவரது இருக்கைக்கு அருகே இளம்பெண் ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்தார்.

பத்திரங்கள் ஒருமணி நேரத்தில் கிடைக்கும்

சென்னை: தமிழகத்தில் தற்போது பத்திரப் பதிவு, இணையம், கணினி உதவியுடன் நவீன முறை யில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பத்திரங்களைப் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் அவற்றைத் திரும்ப வழங்கும் திட்டம் வரும் 17ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என மாநிலப் பதிவுத் துறைத் தலைவர் குமர குருபரன் தெரிவித்துள்ளார். பத்திரப் பதிவுத் துறை தற் போது நவீனமயமாக்கப்பட்டுள்ள நிலையில் பத்திரப் பதிவு முடிந்த பிறகு அதை உரியவர்களுக்கு வழங்க சில நாட்கள் ஆகிறது.

கூகள் வரைபடத்தின் உதவியோடு கொள்ளையடித்த இருவர் அதிரடிக் கைது

சென்னை: அண்மைக் காலமாகச் சென்னையில் பல்வேறு கொள் ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை தெலுங்கானா போலிசார் கைது செய்துள்ளனர். சதீஷ் ரெட்டி, நரேந்திரன் ஆகிய அவ்விருவரும் கூகள் வரைபடத்தின் மூலம் கொள்ளை யடித்ததாக தெரிவித்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள் ளது. கொள்ளையடிக்கப் போகும் இடத்தின் அமைப்பு மற்றும் இதர விவரங்களைச் சேகரித்து, அதன் பிறகு இருவரும் கொள்ளைத் திட்டத்தைக் கச்சிதமாகச் செயல் படுத்தி வந்துள்ளது. அண்மையில் சென்னையில் அப்போலோ மருத்துவர் ஒருவரது வீட்டில் கைவரிசை காட்டிய இருவரும் மேலும் சில வசதி படைத்தவர்களின் வீடுகளிலும் கொள்ளையடித்துள்ளனர்.

ஆதரவற்ற குழந்தைகள்: பாசத்துடன் வளர்த்து வரும் அரசு செயலர்

நாகை: சுனாமியின் போது நாகையில் உயிர் தப்பிய இரு பெண் குழந்தைகளைச் சுகாதாரத் துறை செயலர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் அங்குள்ள காப்பகம் ஒன்றில் அனுமதித்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நாகை மாவட்டத்தில் புயல் நிவாரணப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அவர், அவ்விரு சிறுமிகளைக் காண காப்பகம் சென்றார். எனினும் அவர்களில் மீனா என்ற சிறுமி மட்டுமே காப்பகத்தில் இருந்தார். ராதாகிருஷ்ணனைக் கண்ட மீனா, அவரைப் பாசத்துடன் ‘அப்பா’ என்று அழைத்த போது காப்பகத்தில் இருந்த அனைவரும் நெகிழ்ந்து போயினர்.

பொதுத்துறை நிறுவனங்களில் வடஇந்தியர்கள் ஆதிக்கம்: ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை: தமிழக மக்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் எழுப்­பப்பட்ட மத்திய°பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய போக்கு தமிழகம் இந்தியாவில்தான் உள்ளதா என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் செயல்பட்டு வரும் பெட்ரோலிய நிறுவனத்தில் 8 வகையான பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு அண்மையில் வெளி யிடப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், வேதியியல் பொறியாளர் பணிக்காக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்லர் எனக் குறை கூறியுள்ளார்.

கடற்கரையில் குவிக்கப்பட்ட போலிசார்

நெல்லை: சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் திடீரென கூடுதல் போலிசார் குவிக்கப்பட்ட தால் பரபரப்பு நிலவியது. நேற்று பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஊர்க்காவல் படையினர் தலைமைச் செயல கத்தை முற்றுகையிட்டுப் போராட் டம் நடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டதாகப் போலிஸ் தரப்பில் பின்னர் விளக்க மளிக்கப்பட்டது. ஊர்க்காவல் படையினருக்கு மாதச்சம்பளம் ஏமதுமில்லை. நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதிலும் பணி புரியும் நாட்களுக்கு மட்டுமே இத்தொகை வழங்கப்படும்.

ப.சிதம்பரம்: ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு சொந்தமல்ல

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி தங்களுக்குச் சொந்தமானது என மோடி அரசு நினைப்ப தாகவும் ஆனால் உண்மை யில் அது மத்திய அரசுக்கு சொந்தமல்ல என்றும் ப. சிதம் பரம் குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலை யில், ஓர் அதிரடி திருப்பமாக உர்ஜித் பட்டேல் ஆளுநர் பதவியை விட்டு 10ஆம் தேதி விலகினார். சொந்த காரணங்களுக்காக பதவி விலகியதாகக் கூறிய அவரது பதவி விலகலை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 13 பேரின் உயிருக்கு ஆபத்து

‌ஷில்லாங்: மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் இயங்கி வந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத் திற்குள் திடீரென வெள்ளம் புகுந்தது. கடந்த மூன்று நாட் களாக வெள்ளநீர் சுரங்கத்திற் குள் சூழ்ந்துள்ளதால் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 13 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்று இன்னமும் தெரியவில்லை. சுரங்கத்திற்குள் சிக்கியவர் களை மீட்கும் பணி தொடர்கிறது. பணிக்குச் சென்றவர்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்பட்டு வரு கிறது.

ராகுலை கைகுலுக்கி, வாழ்த்தாத மோடி

புதுடெல்லி: அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களைத் தவிர ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங் களிலும் பாஜக வசம் இருந்த ஆட்சியைக் காங்கிரஸ் தன் வசம் கைப்பற்றியது. இந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் அடைந்துள்ள வெற்றி வரலாறு காணாத வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.

Pages