You are here

உல‌க‌ம்

கிம் ஜோங் நாம் கொலை வழக்கு; தற்காப்பு வாதத்தை முன்வைக்க நீதிபதி உத்தரவு

கோலாலம்பூர்: வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டது தொடர் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு பெண்களுக்கு எதிரான வழக்கு விசாரணையைத் தொடர்வதற்கு போதிய வலுவான ஆதாரங்கள் இருப்பதாக மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள அவ்விரு பெண்களும் அவர்களின் தற்காப்பு வாதத்தை முன்வைக்க ஷா அலாம் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மி அரிஃப்பின் உத்தரவிட்டார். கிம் ஜோங் நாம் கொலை தொடர்பில் இந்தோனீசியப் பெண் சிட்டி அய்ஷா மற்றும் வியட்னா மியப் பெண் டோன் தி ஹுவோங் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொய்ச் செய்தி தடுப்புச் சட்டம் மலேசியாவில் ரத்து

கோலாலம்பூர்: முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் நடப்புக்கு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய பொய்ச்செய்தி தடுப்புச் சட்டத்தை மலேசிய நாடாளுமன்றம் ரத்து செய்துள்ளது.

அந்தச் சட்டம் நடப்புக்கு வந்து நான்கு மாதங்களே ஆன நிலையில் அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வகை செய்யும் மசோதாவை மலேசிய நாடாளுமன்றம் நேற்று நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த 6 மணி நேர விவாதத் தின்போது இந்தச் சட்டத்தை நீக்கக்கூடாதென தேசிய முன்னணி எம்பிக்களும் பாஸ் கட்சி எம்பிக்களும் வலியுறுத்தினர். எனினும் பக்கத்தான் ஹரப்பானின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப அச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்த அமெரிக்க ஊடகங்கள் பிரசாரம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அமெரிக்க ஊடகங்களை கடுமையாக சாடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட அமெரிக்க செய்தித்தாட்கள் நேற்று பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தும் பிரசார இயக்கத்தை தொடங்கின. பாஸ்டன் குளோப், நியூயார்க் டைம்ஸ் உட்பட பல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் நேற்று வெளியிட்ட தலையங்கச் செய்தியில் பத்திரிகை சுதந்திரம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஜோக்கோவி: உள்கட்டமைப்பு மேம்பாடு இந்தோனீசியாவை ஐக்கியப்படுத்தும்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதால் புதிய பொருளியல் நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும் இதன் மூலம் இந்தோனீசிய வட்டாரங்களுக்கு மதிப்பு மேலும் கூடும் என்றும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கூறினார். இந்தோனீசியா அதன் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் நேற்று நாடாளுமன்றத்தில் திரு விடோடோ உரையாற்றினார்.

முகமாற்று அறுவை சிகிச்சை பெற்ற அமெரிக்கப் பெண்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் ஓர் இளம் பெண் பல்வேறு குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அவரது முகம் விகாரமாகிவிட்டது. அதைச் சரி செய்யும் பொருட்டு அண்மையில் அவருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் அமெரிக் காவிலேயே ஆக இளவயதில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் என்ற பெயரை அவர் பெறுகிறார். கேத்தே ஸ்டப்பிள்பீல்ட் 18வது வயதில் தன்னைத் தானே தாடைக்கு அடியில் வேட்டை துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொண்டார். தற்போது அவருக்கு 22 வயதாகிறது.

இத்தாலியில் தீவிர மீட்புப் பணிகள்

ரோம்: இத்தாலியின் ஜெனோவா நகரில் நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்ககை 37 ஆக உயர்ந்துள்ள நிலையில் அவ்விடத்தில் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பாலம் இடிந்து விழுந்ததில் பாலத்திற்கு அடியில் பல வாகனங்கள் சிக்கியுள்ளன. பாலம் இடிந்துவிழுந்த போது அந்த நெடுஞ்சாலையில் 32 கார்களும் மூன்று கனரக வாகனங் களும் சென்று கொண்டிருந்ததாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களில் பலர் இன்னும் உயிருடன் இருக் கக்கூடும் என்று மீட்புக் குழுவினர் நம்புகின்றனர். சுமார் 250 தீயணைப்பு வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: ராணுவ வீரர்கள் 35 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்கு மாநிலத்தில் உள்ள ராணுவத் தளம் மீது தலிபான் போராளிகள் தாக்குதல் நடத்திய தில் 35 ராணுவ வீரர்களும் போலிஸ்காரர்களும் கொல்லப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி நகரை கைப்பற்றும் நோக்கத்துடன் தலிபான் போராளிகள் சென்ற வாரம் அந்நகரை சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கினர். இந்நிலையில் அந்நாட்டின் வடக்குப் பகுதியில் பாகியான் மாநிலத்தில் உள்ள ராணுவத் தளத்தின்மீது செவ்வாய்க்கிழமை இரவு போராளிகள் தாக்குதல் நடத்தியதாக மாநில உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஹாங்காங்கில் போட்டி குழுக்கள் ஆர்ப்பாட்டம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் பெய் ஜிங் கேட்டுக்கொண்ட பிறகும் சுதந்திர ஆர்வலரின் பேச்சு ரத்து செய்யப்படாததால் பரம வைரி களான இரு குழுக்கள் நேற்று செய்தியாளர் சங்கக் கட்டடத் துக்கு வெளியே கூடி ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டன. பெய்ஜிங் அரசின் ஆதரவாளர் களும் சுதந்திர ஆதரவாளர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிராக போட்டி போட்டுக்கொண்டு முழக்கமிட்டனர். போலிசாருடன் மோதலில் ஈடு பட்ட சுதந்திர ஆதரவு குழுவினர், ஆர்ப்பாட்டம் நடத்த எங்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கப்படவில்லை என்று கூறினர்.

சிங்கப்பூருக்கு விற்கப்படும் நீரின் விலையை பத்து மடங்குக்கு மேல் உயர்த்த மகாதீர் விருப்பம்

புத்ரஜெயா: சிங்கப்பூருக்கு விற்கப் படும் சுத்திகரிக்கப்படாத நீரின் விலையை பத்து மடங்குக்கு மேல் உயர்த்த வேண்டும் என்று மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினத்தை அவர் காரணமாக சுட்டிக்காட்டியிருக் கிறார். மலேசியாவுக்கும் சிங்கப்பூருக் கும் தற்போது நடப்பில் உள்ள தண்ணீர் உடன்பாடு 2061ல் காலாவதியாகிறது. இதன் அடிப்படையில் ஜோகூர் ஆற்றிலிருந்து நாளுக்கு 250 மில்லியன் காலன் சுத்திகரிக்கப் படாத நீரைப் பெற்று வரும் சிங்கப் பூர், நாள்தோறும் ஐந்து மில்லியன் காலன் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஜோகூருக்கு வழங்கிவருகிறது.

ஆங்கிலம் கற்கும் மலேசிய போலிஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் அரசாங்கச் சேவை அதிகாரிகள் ஆங்கில மொழியில் நன்கு புலமை பெற்று இருக்க வேண்டும் என்று மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது நெருக்கி வரு கிறார். இந்த நிலையில், மலேசிய போலிஸ் அதிகாரிகள் ஆங்கில மொழி ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள். மூத்த போலிஸ் அதிகாரிகளுக் காக சென்ற மாதம் தீவிரமான ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதில் மாவட்ட போலிஸ் தலைவர்கள் உட்பட பெரிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு இருக் கிறார்கள்.

Pages