You are here

சமூகம்

எழுத்தாளர் ஜெயந்தியின் ஓவியக் கண்காட்சி உள்ளூர் எழுத்தாளரான திருமதி ஜெயந்தி

சங்கரின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் முதன் முறையாகக் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. சுமார் 23 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் ஆகியவற்றில் முத்திரை பதித்து வந்த திருமதி ஜெயந்தி கடந்த ஆண்டு தொடக்கம் முதல் ஓவியங்கள் தீட்டுவதில் ஆர்வம் கொண்டு அந்தக் கலையின் நுணுக்கங்களைச் சுயமாக கற்றுக்கொள்ள முனைந்தார். ‘சார்க்கோல்’, ‘பென்சில்’, ‘பேஸ்டல்’, ‘அக்ரிலிக்’ ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஓவிய முறைகளை முயற்சித்துப் பார்த்துள்ள அவர், ‘சார்க்கோல்’, ‘வாட்டர்கலர்’ ஆகியவற்றைப் பயன்படுத்தி வரையும் ஓவியங்களில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்.

பணமும் உடைகளும் கொடுத்து உதவிய ஹனிபா டெக்ஸ்டைல்ஸ்

கேரளாவில் வெள்ளப் பெருக்கால் அவதியுற்றோருக்கு உதவ சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) சிங்கப்பூர் மலையாளிகள் சங்கத்துடன் இணைந்து, லிட்டில் இந்தியாவின் ஆர்க்கெட்டுக்கு முன்பு நன்கொடைக் கூடாரம் ஒன்றை அமைத்துள்ளனர். சென்ற மாதம் 28ஆம் தேதி அமைக்கப்பட்ட இந்த நிதி திரட்டு கூடாரம் (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) இம்மாதம் 20ஆம் தேதி வரை இருக்கும். தினமும் காலை 10 மணி முதல் இரவு 9.15 மணி வரை இயங்கும் இந்தக் கூடாரம் சிங்கப்பூர் மலையாளிகள் சங்கத் தைச் சேர்ந்த தொண்டூழியர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

250 வீடுகளைக் கட்டித்தரும் ஜோயாலுக்காஸ் அறநிறுவனம்

கேரளாவில் அண்மையில் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் சமூகப் பணியில் இறங்கியுள்ளது ஜோயாலுக்காஸ் அறநிறுவனம். மொத்தம் ரூ.15 கோடி ($3 மில்லியன்) மதிப்பில் 250 வீடுகள் கட்டித்தர இலக்கு கொண்டுள்ள இந்தத் திட்டத்திற்கு ஜோயாலுக் காஸ் குழுமத்தின் ஊழியர்களும் சில ஆதரவாளர்களும் நிதி அளித்திருப்பதாக அந்த நிறு வனத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பி.கிருஷ்ணனுக்கு கலா ரத்னா விருது

தமிழ் இலக்கியத்திற்கு அரும் பங்காற்றியுள்ள திரு கிருஷ்ணன் பெருமாளுக்கு சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், கலா ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. அந்த விழாவின்போது திரு பி.கிருஷ்ணனின் வாழ்நாள் சாதனைக்குச் சிறப்பு சேர்க்கப் பட்டது. ‘புதுமைதாசன்’ எனும் புனைப் பெயரில் திரு பி.கிருஷ்ணன் கைகளிலிருந்து மலர்ந்த நாட கங்கள், கவிதைகள் சிங்கப்பூரில் மட்டுமின்றி அண்டை நாடான மலேசியாவிலும் பாராட்டுகளைப் பெற்றவை.

தமிழர் பேரவையின் தேசிய தினக் கொண்டாட்டங்கள்

ப. பாலசுப்பிரமணியம்

கடந்த 18 ஆண்டுகளாக தமிழர் பேரவை தனது 40 இணை அமைப்புகளுடன் தேசிய தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. இம்மாதம் 1ஆம் தேதி, எம்டிஐஎஸ் வளாகத்தில் சிங்கப்பூரின் 53வது பிறந்தநாளை சமூக, அடித்தளத் தலைவர்கள், தொண்டூழியர்கள், மாணவர்கள் என 400 பேருடன் தமிழர் பேரவை கொண்டாடியது. இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரான டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழ் விழா 2018

ஃபிரான்டியர் சமூக மன்றம் ‘தமிழ் விழா 2018’ எனும் நிகழ்ச்சியை இம்மாதம் 1ஆம் தேதியன்று நடத்தியது. நிகழ்ச்சியில் வாழ்வில் வளமும் நலமும் சேர்ப்பது உறவா? நட்பா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தமிழ் எழுத்துத் திறன் போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. போட்டியில் மொத்தம் 78 மாணவர்கள் பங்கெடுத்தனர். சிறுகதைப் போட்டியில் முதல் இடம் பிடித்த பெண்டமியர் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அழகர்சாமி துரைகுமாருக்கு விஜய் டிவி புகழ் திரு மணிகண்டன் பரிசை வழங்குகிறார். படம்: ஃபிரான்டியர் சமூக மன்றம்