சிறப்புக் கட்டுரை

முதலாம் உலகநாடாகக் கருதப்படும் அதிநவீன சிங்கப்பூரில், கிட்டத்தட்ட 1,000 பேர் நிரந்தர வீடில்லாமல் இருப்பது 2019ஆம் ஆண்டில் தெரியவந்தபோது பலரும் அதிர்ச்சியுற்றனர். மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் சொந்த வீடுகளில் தங்கி உள்ளனர். சிங்கப்பூரின் வீட்டுரிமை விகிதம் உலகளவில் ஒப்பிடுகையில் உயர்ந்து நிற்கிறது. தெருக்களுக்குத் தள்ளப்பட்டோருடன் பொதுமக்கள் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வது அரிதே. இந்நிலையில், அவர்களின் நிலை தற்சமயம் கூடுதல் ஆதரவுடன் மேம்பட்டு வருகிறது. அவர்களின் அனுபவங்கள், அரசாங்கம் எவ்வகையில் அவர்களை மீட்டெடுத்து வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துத் தருகிறது என்பன குறித்து ஆராய்கிறது இவ்வாரச் சிறப்புக் கட்டுரை.
சிங்கப்பூரின் முதல் பிரதமரான மறைந்த திரு லீ குவான் இயூ சிங்கப்பூரை அதிவேக வளர்ச்சியடையச் செய்தவர் மட்டுமல்ல, சிங்கப்பூரில் இந்தியர்களுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களைத் தூக்கிவிட்டவரும்கூட. 
இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூர் மக்களின் தேவைகளை முன்னிறுத்தி அவர்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு ஆதரவுத் திட்டங்களையும் செயல்திட்டங்களையும் அறிவித்தார். இம்மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற இவ்வுரையைப் பற்றிய பொதுமக்களின் கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் அறிந்து வந்தது இவ்வார தமிழ் முரசு.
தேசிய தின அணிவகுப்புக்கு இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையில் ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.
திருவாட்டி ஹலிமா யாக்கோப் கடந்த ஆறு ஆண்டுகளாக அதிபர் பொறுப்பை வகித்து வருகிறார்.