தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய்யை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் சந்தித்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அப்போது, திரைத்துறை சார்ந்த சில கோரிக்கைகள் முதல்வரிடம் முன்வைக்கப்பட்டன.
மேலும், நடிகர் சங்கத்துக்காகக் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது தொடர்பாகவும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதனிடையே, நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பல மூத்த கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்; திரைத்துறைக்கான அரசு விருதுகளை ஆண்டுதோறும் தாமதமின்றி வழங்கிடவேண்டும்; படப்பிடிப்புகளுக்கும் திரையரங்குகளில் புதுப்படங்களுக்குச் சிறப்புக் காட்சிகளைத் திரையிடுவதற்கும் அனுமதி வழங்கப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

