தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷும் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்குரும் காதலிப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், மிருணாள் தாக்குர் நடித்த படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு தனுஷ் கருத்து பதிவிட்டிருந்தார். அதற்கு அவர் ஓர் ‘இதய’ உணர்குறியைப் பதிலாகப் போட்டிருந்தார்.
இதையடுத்து, தனுஷ் நடித்து வெளியாகி உள்ள ‘தேரே இஷ்க் மே’ படம் தொடர்பாகவும் இன்ஸ்டகிராமில் பதிவிட்டு இருந்தார் மிருணாள் தாக்கூர்.
இதைப்பார்த்த ரசிகர்கள் தனுஷும் மிருணாள் தாக்கூரும் காதலிப்பதாக நினைத்தனர். அதற்கு ஏற்ப ஊடகங்களிலும் வதந்திகள் பரவத் தொடங்கின.
ஆனால், தனுஷ் எனது நண்பர் மட்டுமே என்று அந்த வதந்திக்கு ஒரு பதில் கொடுத்திருந்தார் மிருணாள் தாக்கூர்.
இது குறித்து பேசிய மிருணாள் தாக்குர், “நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரைப் பற்றி வதந்திகள் பரவி வருவதை அறிகிறோம். இதுபோன்ற வதந்திகளைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புத்தான் வந்தது,” என்று கூறி சர்ச்சைக்கு முடிவுகட்டினார்.
இந்த நிலையில், தற்போது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயருடன் மிருணாள் தாக்கூர் ‘டேட்டிங்’ செய்து வருவதாக பாலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
மும்பையில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளில் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசி வருவதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இருவரும் தங்களின் தொழிலின் உச்சத்தில் இருப்பதால் தங்களது காதலைப் பொதுவெளியில் அறிவிக்க அவர்கள் தயக்கம் காட்டுவதாகவும் நண்பர்களின் விருந்து நிகழ்ச்சிகளில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, தனுஷைத் தான் காதலிப்பதாக செய்திகள் வெளியானபோது, அவர் நல்ல நண்பர் மட்டுமே என்று கூறிய மிருணாள் தாக்குர், ஷ்ரேயாஸ் ஐயர் விவகாரத்தில் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது குணமடைந்து ஓய்வில் இருந்து வருகிறார்.
தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படத்தில் மிருணாள் தாக்குர் நடித்து வருகிறார்.

