ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா

ஆத்திரத்தில் கொந்தளித்த நடிகை ஸ்ரேயா

1 mins read
ab388484-6fe0-43c4-8f2d-5c3c4e419835
ஸ்ரேயா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள ஸ்‌ரேயா, தற்போது முகம் தெரியாத ஓர் ஆள்மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்.

காரணம், அந்த ஆள் ஸ்ரேயாவின் இன்ஸ்டகிராம் பக்கத்தைப் போன்றே ஒரு போலிக்கணக்கை தொடங்கி உள்ளார். மேலும், ஸ்‌ரேயாவுக்கு நெருக்கமானவர்களைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இதையறிந்த ஸ்ரேயா அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் சமூக ஊடகப் பதிவில், அந்த அடையாளம் தெரியாத நபரை வார்த்தைகளால் வறுத்தெடுத்துள்ளார்.

“இந்த முட்டாள் யார்? தயவு செய்து இப்படிப் போலியாக தகவல் அனுப்பி பிறரது நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள். மக்களின் நேரத்தை வீணடிப்பதற்காக நான் வருத்தப்படுகிறேன். இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.

“இந்த எண் என்னுடையது அல்ல. இந்த ஆள் என்னைப் போல, என்னுடன் பணி செய்ய விரும்புபவர்களிடம் பேசுகிறார். இப்படியான செயல்களில் உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? ஆள்மாறாட்டக்காரராக இல்லாமல், ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்குங்கள்,” என்று சம்பந்தப்பட்ட நபருக்கு அறிவுரையும் வழங்கி உள்ளார் ஸ்ரேயா.

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். இவருக்கு ராதா என்ற மகள் இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்