தங்க மயில் விருதுப் போட்டியில் ‘அமரன்’

தங்க மயில் விருதுப் போட்டியில் ‘அமரன்’

படம்: ஊடகம்

21 Nov 2025 - 12:51 pm

1 mins read

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் கோவாவில் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

இது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய கோவா திரைப்பட விழா, 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவின் முக்கிய அங்கமாக, சிறந்த திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்க மயில் விருது வழங்கப்படும்.

அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் 56வது பட விழாவில் தங்க மயில் விருதுக்கு ‘அமரன்’ படமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள அப்படத்தின் தயாரிப்புத் தரப்பான ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ‘அமரன்’ படத்தின் வெற்றி உற்சாகம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், கடந்த ஓராண்டு காலமாக ‘அமரன்’ திரைப்படம் பல்வேறு மகிழ்ச்சியான தருணங்களைத் தந்துள்ளதாகவும் வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற அனுபவங்கள் நீடிக்கும் எனத் தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்