ராஷ்மிகா நடிக்கும் படம் குறித்துப் புதிய தகவல்

ராஷ்மிகா நடிக்கும் படம் குறித்துப் புதிய தகவல்

படம்: ஊடகம்

06 Jul 2025 - 1:32 pm

1 mins read

ராஷ்மிகா நடிக்கும் ‘தி கேர்ள்பிரண்ட்’ படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.

இந்நிலையில், அப்படத்தைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ராஷ்மிகா மந்தனா முன்னணி இடத்தில் இருப்பவர்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.

இத்திரைப்படம் வசூலில் ரூ.100 கோடியை கடந்து வெற்றி நடைப்போட்டு வருகிறது.

அனிமல், புஷ்பா 2க்குப் பிறகு, ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை குபேரா படம் மூலம் கொடுத்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக ‘தி கேர்ள்பிரண்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார்.

படத்தின் முன்னோட்டக் காட்சி சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதன் படப்பிடிப்புப் பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகின்றன.

இதில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர்.

ராகுல் ரவீந்திரன் இதற்கு முன்பு ‘சி லா சோவ்’, ‘மன்முதுடு 2’ திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ராஷ்மிகாதிரைச்செய்திதிரைப்படம்