ராணுவ வீரர் எழுதிய தேசப்பற்றுக் கதையை இயக்கி நடிக்கும் அர்ஜுன்

ராணுவ வீரர் எழுதிய தேசப்பற்றுக் கதையை இயக்கி நடிக்கும் அர்ஜுன்

படம்: தெலுகு டைம்ஸ்

27 Nov 2026 - 5:50 pm

1 mins read

பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் சார்பாக அனூப் மேனன் தயாரிப்பில் நடிகர் அர்ஜுன் இந்தியா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு ஏற்ற பான் இந்தியா திரைப்படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் பூஜையும் படத் தலைப்பு அறிவிப்பும் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) அயோத்தி ராமர் கோயிலில் நடைபெறத் திட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பின் மூன்றாவது படமாக இந்தப் படம் உருவாகிறது. இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இருக்கும் நாயகர்கள் இதில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஜர் விஜய் ராகவன் இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்பது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் தியாகம், வீரம், தேசப்பற்று மிகுந்த கருத்துகள் அடங்கிய கதையாக உருவாகியுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் உணர்ச்சி மிகுந்த கதையாக உருவாகியிருக்கிறது.

அயோத்தியில் இந்தப் படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் கலந்துகொள்வர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் முக்கியத்துவம் குறித்தும் அங்கு பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாயின.

கடைசியாக அர்ஜுன் நடிப்பில் ‘பிளாஸ்ட்’ திரைப்படம் வெளியானது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

‘பொலிமேரா 3’ படத்திலும் அவர் தற்போது நடித்துவருகிறார்.

குறிப்புச் சொற்கள்