திரையுலகம் தேய்ந்துகொண்டே போகிறதோ? என்று தமக்குள் அச்சம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார் கமல்ஹாசன்.
தாம் சினிமாவின் குழந்தை என்றும் சினிமாவைத்தவிர தமக்கு வேறு எதுவும் தெரியாது என்றும் அண்மையில் சென்னையில் நடைபெற்ற வேல்ஸ் திரைப்பட நகரத்தின் தொடக்க விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

“எனது மொழி, கல்வி, இப்போது நான் பெற்றுள்ள பட்டங்கள் எல்லாமே சினிமா எனக்குக் கொடுத்தவை. அப்படிப்பட்ட சினிமா தேய்ந்துகொண்டே போவது போன்று 25 ஆண்டுகளுக்கு முன்பு எனக்குள் ஒரு பயம் இருந்தது.
“’பான் இந்தியா மூவி’ என்பதைத் தொடங்கியதே சென்னைதான். தற்போது உலகத்திலேயே அதிகமான திரைப்படங்களைத் தயாரிக்கும் ஒரு நாட்டில் நவீன வசதிகளுடன் கூடிய திரைப்பட நகரம் இருக்க வேண்டியது அவசியம்.
“இங்கே சினிமா பயிலும் ஓர் அரங்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசாங்கம் அல்ல, திரையுலகம்,” என்றார் கமல்ஹாசன்.

தொடர்புடைய செய்திகள்