இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தின் மகன் அனிருத்தாவுக்கும் ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை சம்யுக்தாவுக்கும் வியாழக்கிழமை (நவம்பர் 27) திருமணம் நடைபெற்றது.
இந்தப் புதுமணத் தம்பதியர்க்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
‘வாரிசு’, ‘மை டியர் பூதம்’, ‘காஃபி வித் காதல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த சம்யுக்தாவுக்கு ஏற்கெனவே விவாகரத்து ஆகிவிட்டது. முதல் திருமணம் மூலம் இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், சம்யுக்தாவுக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் மகன் அனிருத்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற அனிருத்தாவும் ஏற்கெனவே மனைவியைப் பிரிந்துவிட்டார்.
இந்நிலையில், சம்யுக்தாவும் அனிருத்தாவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி வியாழக்கிழமையன்று நடந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

