அறிமுக நடிகருக்கே ரூ.30 கோடி சம்பளம்: கோலிவுட்டை அதிரவைக்கும் லோகேஷ் கனகராஜ்

அறிமுக நடிகருக்கே ரூ.30 கோடி சம்பளம்: கோலிவுட்டை அதிரவைக்கும் லோகேஷ் கனகராஜ்

படம்: இந்திய ஊடகம்

13 Nov 2025 - 3:51 pm

1 mins read

தமிழ் சினிமாவில் இன்றைய இளம் இயக்குநர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். குறுகிய காலத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் நடித்த படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றவர்.

அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், அனிருத் இசையமைக்கும் ‘டிசி’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்கிறார்.

இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அறிமுக நடிகர் ஒருவர் இவ்வளவு சம்பளம் வாங்குவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் சில இயக்குநர்கள் ரூ.25 கோடிக்கும் அதிகமான சம்பளத்தைப் பெற்று வருகிறார்கள் என்பது கோலிவுட் தகவல்.

அதில் இளம் இயக்குநர்கள் சிலரும் இருக்கிறார்கள். படத்தை இயக்க வாங்கும் அதே அளவு சம்பளத்தை நடிப்புக்கும் லோகே‌‌ஷ் வாங்குவது ஆச்சரியமான ஒன்று என்கிறார்கள் திரையுலகினர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்