மீண்டும் இணையும் ஜோடி

மீண்டும் இணையும் ஜோடி

படம்: ஊடகம்

08 May 2025 - 4:24 pm

1 mins read

‘கல்கி’ படத்திற்குப் பிறகு மீண்டும் பிரபாஸுடன் இணையும் தீபிகா படுகோன்.

பிரபாஸ் தற்போது ‘தி ராஜா சாப்’, ‘பாஜி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘தி ராஜா சாப்’ படத்தை மாருதி இயக்கி வருகிறார்.

மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘பாஜி’ படத்தை ஹனு ராகவுப்படி இயக்கி வருகிறார். இப்படத்தில் இமான்வி, ஜெயப்பிரதா, மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இவற்றை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க உள்ளார். நாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தமாகியுள்ளார். அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

2024ஆம் ஆண்டே ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு துவங்க இருந்த நிலையில் தீபிகா கர்ப்பமாக இருந்ததால் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டார். ஆனால், படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தற்போது மீண்டும் தீபிகாவிடம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர். இருவரும் கடந்தாண்டு வெளிவந்த ‘கல்கி’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை