‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கோடம்பாக்கத்தில் முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் இணைந்துவிட்டார்.
சூட்டோடு சூடாக அவர், அடுத்து நடிகர் தனுஷை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
மேலும் சில முன்னணி நடிகர்களும் அவரை அணுகியதாகக் கூறப்பட்டது.
ஆனால், தனுஷ் உடனான பேச்சுவார்த்தைதான் சுமுகமாக நடைபெற்றதாகவும் அடுத்தகட்ட பேச்சுகள் தொடங்கி இருப்பதாகவும் அண்மைத் தகவல் தெரிவிக்கிறது.
தனக்கு எந்த மாதிரியான கதைகள் பிடிக்கும், தனது மற்ற எதிர்பார்ப்புகள் என்ன என்பதெல்லாம் மிகத் தெளிவாகக் கூறிவிட்டாராம் தனுஷ். மிக விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

