அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ரெட்ட தல’. இதை கிருஷ் திருகுமரன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சாம்.சி.எஸ் இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் தனுஷ்.
அருண் விஜய் பல படங்களில் நாயகனாக நடித்து வந்த நிலையில், திடீரென ஒரு நாள் தொடர்புகொண்டு பேசினாராம் தனுஷ்.
அப்போது தாம் ‘இட்லிகடை’ என்ற படத்தை இயக்கப் போவதாகக் குறிப்பிட்டு, அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.
தனுஷுக்காக அந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் அருண் விஜய். அதற்கு நன்றிக் கடனாகவே, ‘ரெட்ட தல’ படத்தின் ஒரு பாடலைப் பாடிக் கொடுத்திருக்கிறர் நடிகர் தனுஷ்.

