நடிகர் தனுஷின் நடிப்பிற்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
அண்மையில், அவர் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான ‘ராயன்’ படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்திற்கு அடுத்து ‘இட்லி கடை’ எனும் படத்தை இயக்கி, நடித்து வருகிறார் தனுஷ்.
அவருடைய கைவசம் மற்றொரு கதை இருப்பதாகவும் அதிலும் அவரே நாயகனாக நடிக்க இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தங்களையும் வைத்து படம் தயாரித்து இயக்குமாறு தனுஷுக்கு நெருங்கிய கதாநாயகர்கள் அவரிடம் கேட்டுள்ளனர். அவர்களின் அழைப்பை ஏற்க மறுத்த தனுஷ், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
“என்னை வைத்து படம் இயக்கவே எனக்கு நேரம் போதவில்லை. அதோடு, மற்ற நாயகர்களை வைத்து படம் இயக்கினால், எனது நடிகன் எனும் அடையாளம் தொலைந்துபோய்விடும். என்னை முழு நேர இயக்குநராக ரசிகர்கள் எண்ணிவிடுவர். அப்படி நடக்க ஒருபோதும் நான் அனுமதிக்கமாட்டேன்,” என தனுஷ் கூறியுள்ளார்.
இதற்கிடையே, வெற்றிமாறன் இயக்கும் ஒன்பதாவது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

