மலையாளத்தில் அறிமுகமாகும் துஷாரா விஜயன்

மலையாளத்தில் அறிமுகமாகும் துஷாரா விஜயன்

படம்: இந்திய ஊடகம்

30 Nov 2025 - 1:23 pm

1 mins read

நடிகை துஷாரா விஜயன் முதல்முறையாக மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

‘காட்டாளன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இவர் நடிக்கிறார் என்று படக்குழு சுவரொட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் கவனம் ஈர்த்த துஷாரா, ரஜினியின் ‘வேட்டையன்’, விக்ரமின் ‘வீர தீர சூரன்’, தனுஷின் ‘ராயன்’ படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தற்போது மலையாளத்திலும் அறிமுகமாகியுள்ளார்.

‘க்யூப்ஸ் இன்டர்நேஷனல்’ தயாரிக்கும் இந்தப் படத்தை பால் ஜியார்ஜ் இயக்கியுள்ளார்.

‘பான்’ இந்திய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘காந்தாரா’ இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை