ஒரு குழந்தைக்குத் தாயான பின்னர் தனது உடலிலும் சிந்தனைப் போக்கிலும் செயல் அளவிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கவனித்து வருவதாகக் கூறுகிறார் நடிகை தீபிகா படுகோன்.
அழும் குழந்தையைச் சமாதானப்படுத்துவதும் தூங்க வைப்பதும் இரவில் குழந்தையின் சிறு அசைவில் தூக்கத்தைத் தொலைப்பதும் ஒரு புதிய வாழ்க்கையை வாழ்வது போன்ற அனுபவத்தைத் தந்துள்ளதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை தொட்டிலில் நெளிந்தபடி ஏகாந்த சிரிப்பை வெளிப்படுத்தும்போது தாம் கரைந்து போவதாகவும் தாம் புதிதாகப் பிறந்ததுபோல் உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் தீபிகா.
தற்போது இவரது குழந்தைக்கு ஒன்றேகால் வயதாகிறது. குழந்தை வளர வளர, தானும் ஒரு குழந்தையாக மாறி வருவதாகச் சொல்கிறார் தீபிகா.
மீண்டும் தமிழில் நடிக்க விரும்புகிறாராம். ஆனால் அது நாயகியை முன்னிலைப்படுத்தும் மண்வாசனைப் படமாக இருக்க வேண்டும் என்கிறாராம்.

