இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்னன் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாஸ்க்’.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இதனிடையே, இளையராஜாவின் பாடல் ஒன்று இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. தனது பாடல், புகைப்படம், இசை போன்றவற்றை வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளார் இளையராஜா. ஆனால், ‘மாஸ்க்’ படத்தில் அவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், படக்குழுவினரிடம் இளையராஜா விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குநர் விகர்னன், “நாங்கள் அந்தப் பாடலை இளையராஜாவிடம் அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்தினோம். அவரிடம் ஆசி பெற்றே படத்தையும் தொடங்கினோம்,” என்றார்.

