தனது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்காக அறிவியலும் கற்பனையும் ஒருசேரக் கலந்த வித்தியாசமான கதையை உருவாக்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“படத்துக்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பார்த்திராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனைத் திரையில் பார்க்கப் போகிறீர்கள்,” என்கிறார் வெங்கட் பிரபு.
முன்னதாக, இந்தப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கால்ஷீட் ஒதுக்காமல் இழுத்தடித்ததாக தமிழக ஊடகங்களில் தகவல் வெளியானது.

