தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் திரைப்படங்கள்

படம்: தினமணி

16 Oct 2026 - 2:29 pm

1 mins read

இவ்வாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல், தீபாவளிப் பண்டிகைகளுக்கு புகழ்பெற்ற நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கும். அதன்படி இவ்வாண்டும் சில திரைப்படங்கள் தீபாவளி வெளியீட்டைக் குறிவைத்துத் தயாராகி வருகின்றன.

இந்தப் பட்டியலில் தீபாவளி வெளியீடாக நவம்பர் 5ஆம் தேதியில் சுந்தர். சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்த மூக்குத்தி அம்மன்- 2 திரைப்படமும் நடிகர் விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி திரைப்படமும் திரைக்கு வருகின்றன.

நவம்பர் 6ஆம் தேதி, நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படமும் வெளியாகவிருக்கிறது.

இதனை, ஆவேஷம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கியுள்ளார்.

இவை தவிர மிகப்பெரிய செலவில் உருவாகியிருக்கும் திரைப்படமான ராமாயணா நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. நிதிஷ் திவாரி இயக்கிய இப்படத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் ‘ஓம்’ திரைப்படம் தீபாவளி வெளியீட்டைக் குறிவைத்துள்ளது. ஆனால், சூர்யாவின் படம் வருவதால் தமிழ் சினிமாவின் நலன்களுக்காக தேதியை மாற்றிக் கொள்வதாக தனுஷ் அறிவித்திருந்தார். இதனால், இப்படம் நவம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்