நடிகர் கிச்சா சுதிப்பின் ‘மார்க்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.
கிச்சா சுதிப் நடிப்பில் உருவாகி, பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘மேக்ஸ்’. இப்படத்தின் இயக்குநர் விஜய் கார்த்திகேயன் தற்போது ‘மார்க்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதிலும் நாயகனாக சுதிப்பே நடித்திருக்கிறார். அதிரடியான அடிதடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் கிறிஸ்மஸ் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சியும் கவனம் பெற்றுள்ளதால் ‘மார்க்’ வெளியீட்டுக்கு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.
‘பான் இந்தியா’ வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளதால் நல்ல வசூலைப் பெறும் என்று கூறுகின்றனர்.

