தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது நாயகன், பாடகர் எனப் பன்முகக் கலைஞராக வலம்வருபவர் ஜி.வி.பிரகாஷ்.
‘வாத்தி’ படத்திற்கு இசையமைத்ததற்காக அவருக்குத் தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.
அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், சிம்புவும் தானும் பள்ளியில் படிக்கும் போதே நண்பர்கள் எனக் கூறிய அவர், வெற்றிமாறனுடன் சிம்பு இணையும் படத்திற்கு இசையமைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.
2007ஆம் ஆண்டு வெளியான ‘காளை’ படத்தின் மூலம் இருவரும் முதன்முதலில் இணைந்தனர். அதற்குப் பிறகு 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றிமாறன் படத்தில் சேர்ந்து பணியாற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.