இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத் திறமைகொண்ட கங்கை அமரன், மறைந்த பாடலாசிரியர் வாலியின் பிறந்தநாள் நிகழ்வில் நடந்த சம்பவம் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மாதம் வாலியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கங்கை அமரன், செய்தியாளர்களிடம் பேசும்போது அவருக்குப் பின்னால் நின்றிருந்த ரசிகர் தொந்தரவு செய்ததால், கங்கை அமரன் அவரைப் பேசச் சொல்ல, அந்த ரசிகரும் பேச ஆரம்பித்தார். ஆனால், கங்கை அமரன் பாதியிலேயே அங்கிருந்து கிளம்ப முற்பட, அங்கிருந்தவர்கள் அவரை மீண்டும் அழைத்தனர்.
மீண்டும் பேச ஆரம்பித்த அவர், அந்த ரசிகரை சங்கடத்தில் ஆழ்த்தியதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டது.
அதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த கங்கை அமரன், “ஓர் ஆள் வளர்ந்த பிறகு அவரிடம் என்ன தவறு இருக்கிறது என்பதை கவனிப்பதற்காகவே பலர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்.
“நான் பேசும்போது, ரசிகரிடம் நான் நடந்துகொண்டதைப் பற்றி இணையத்தில் மோசமான ஆளாக ஆக்கிவிட்டீர்களே! சிவகுமாரும்தான் கைப்பேசியைத் தட்டிவிட்டார். யாராவது ஏதாவது செய்தீர்களா?” என்று கேள்வி எழுப்பியது தற்பொழுது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

