ஹரி ஹர வீரமல்லு முன்னோட்டக் காட்சி வெளியீடு - சினிமா

1 mins read
938f0894-55bb-4e4c-8957-3793b89f5e67
பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு முதல் பாகத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. - கோப்புப் படம்

பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு முதல் பாகத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

ஆந்திரத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் மூன்று படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) தயாராகி வருகின்றன.

சமீபத்தில் ஹரி ஹர வீரமல்லு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. வெளியீட்டுத் தேதி 4 முறைக்கும் மேல் மாறிக்கொண்டே இருந்தது.

கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கிய இப்படம் வருகிற ஜூலை 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

அண்மையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘தாரா தாரா’ என்கிற பாடல் வெளியிடப்பட்டது.

நாயகி நிதி அகர்வாலின் நடனக் காட்சிகள் நன்றாக இருப்பதுடன் மரகதமணியின் இசையமைப்பும் ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்து வருகிறது.

தமிழில் இப்பாடலைப் பா. விஜய் எழுத லிப்ஸியா, ஆதித்யா ஐயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்