நடப்பாண்டில் வெளியான தமிழ்ப் படங்களில் வசூல் ரீதியாக ‘தாய் கிழவி’ படம் முதல் இடத்தில் உள்ளது. இதன்மூலம் அதிக லாபம் கண்ட படங்களில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு ‘தாய் கிழவி’, ‘யூத்’, ‘வித் லவ்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’ ஆகியவை லாபகரமான படைப்புகளாக அமைந்தன.
பொங்கலை முன்னிட்டு வெளியான ‘பராசக்தி’ படம் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டாலும், தயாரிப்புத் தரப்புக்கு லாபகரமாக அமையவில்லை. இந்த ஆண்டு வேறு எந்தப் படமும் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டிப்பிடிக்கவில்லை.
இந்நிலையில், ‘தாய் கிழவி’ படம் வெளியாகி, 75 நாள்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுநாள் வரை இப்படத்தின் வசூல் ரூ. 90 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘யூத்’ படம் ரூ. 82 கோடியும் ‘வித் லவ்’ ரூ. 39 கோடியும் வசூல் கண்டுள்ளன.

