மனத்தில் பட்டதை பளிச்சென்று பேசி வருகிறார் இளம் நாயகி இவானா. அஜித்துக்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்பதுதான் இவரது நீண்டநாள் ஆசை.
“மற்றபடி மணிரத்னம் படத்தில் நடிப்பதே எனது வாழ்நாள் லட்சியம் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். அதே சமயம் இயக்குநர் பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ‘நாச்சியார்’ படம் மூலம் நிறைவேறிவிட்டது.
“’கிழக்கு தொடர்ச்சி மலை’, ‘கொட்டுகாளி’, ‘வட்டார வழக்கு’ போன்ற கலப்படமில்லா, மண் சார்ந்த படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம்தான் இன்னும் நிறைவேறவில்லை,” என்கிறார் இவானா.
மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் நாம் எதை மறந்து விடக்கூடாது என்பதில்தான் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் படங்கள்தான் காலத்தின் தேவையாக உள்ளது என்று கூறும் இவர், அத்தகைய படைப்புகளில் இடம்பெற ஆவலாக இருப்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

