“மதுரையில் திரையரங்க ஊழியராக என் பயணத்தைத் தொடங்கி, இன்றுள்ள நிலையை அடைய இசையமைப்பாளர் இளையராஜாதான் முக்கியமான காரணம்,” என்கிறார் நடிகர் ராமராஜ்.
இளையராஜாவின் இனிமையான பாடல்களே தம்மை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“என் 50வது திரைப்படத்தை நானே இயக்கி, அதற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க வேண்டும் என்பதே என் பேராசை,” என்று கூறியுள்ள ராமராஜ் மீண்டும் இளையராஜாவுடன் கூட்டணி அமைக்கிறா்.
இளையராஜா தமிழ்த் திரையுலகில் தனது பொன்விழா ஆண்டை எட்டியுள்ள நிலையில், அவருடன் நடிகர் ராமராஜன் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்துக்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
