இந்திய விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஜி.டி.நாயுடு’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜி.டி.நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இப்படத்தின் தமிழக உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் மாதவன், சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணிபுரிந்துள்ளார்.
சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு பணிகள் நடந்தன.
இப்படத்துக்காகப் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார் மாதவன். மாதவனின் சில வேடங்கள் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தின் முன்னோட்டம், ‘டீசர்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜி.டி.நாயுடு’ திரைப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

