நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.
கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் அரங்கில் டிசம்பர் 27ஆம் தேதி அந்நிகழ்ச்சி நடைபெறும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழா திடலில் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலிருந்து 80,000க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளைத் தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இது, நடிகர் விஜய்யின் 35 ‘ஹிட்’ பாடல்களுக்கான இசை நிகழ்ச்சியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நுழைவுச் சீட்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.2,200 முதல் ரூ.6,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால், இசை வெளியீட்டு விழா மூலமாகவே கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ரூ.25 கோடி வரை வசூலிக்கலாம் எனத் தெரிகிறது. அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத்தீர்ந்தால் இசை வெளியீட்டு விழாவிலேயே அதிகம் வசூலித்த சாதனை ஜனநாயகனுக்குக் கிடைக்கும்.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய அரங்கான புக்கிட் ஜலீலில் 85,000 பேர் வரை அமர்ந்து பார்க்க முடியும்.

