ஒரே சூரியன், ஒரே நிலா போன்று ஒரே ரஜினிதான்: சௌந்தர்யா

ஒரே சூரியன், ஒரே நிலா போன்று ஒரே ரஜினிதான்: சௌந்தர்யா

கோப்புப் படம்: விகடன்

02 Oct 2026 - 4:11 pm

1 mins read

ஒரே சூரியன், ஒரே நிலா போன்று ஒரே ரஜினிதான் என்று தனது தந்தை குறித்துப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் சௌந்தர்யா.

கடந்த ஆண்டு வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படம், ரஜினியின் திரைப்பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தது. ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற கம்பீரமான கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார்.

இயக்குநர் நெல்சனின் சுவாரசியமான திரைக்கதையினாலும் அனிருத்தின் பின்னணி இசையினாலும் அப்படத்தை வெளியிட்ட திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டன.

தற்போது இந்த வெற்றிக் கூட்டணியின் அடுத்த படைப்பான ‘ஜெயிலர்-2’ படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், “ஒரே சூரியன், ஒரே சந்திரன் போல, ஒரே தலைவன் என்றால் அது என் அப்பா மட்டும்தான். ‘ஜெயிலர்-1’ படத்தைவிட அதன் இரண்டாம் பாகத்தில் என் தந்தை இன்னும் தீவிரமாக உழைத்துள்ளார்.

“இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆர்வமாகக் காத்திருக்கிறேன்” எனக் கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்