காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமணம்

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமணம்

படம்: ஊடகம்

09 Dec 2024 - 7:01 pm

1 mins read

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் திருமணம் ஞாயிற்றுக்கிழமை கேரளாவின் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார் காளிதாஸ். பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’, கமலின் ‘விக்ரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர் விளம்பர அழகி தாரிணி காலிங்கராயர் என்பவரைக் காதலித்து வந்தார்.

பெற்றோர் சம்மதத்துடன் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில், அவர்களது திருமணம் கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்