மீண்டும் நடிக்கத் தயாரான கியாரா

1 mins read
59a35837-cb9c-4164-a5d6-ed2e5b9b5929
கியாரா அத்வானி. - படம்: தி ஸ்டேட்ஸ்மேன்

கடந்த ஜூலையில் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்த அத்வானி, கடும் உடற்பயிற்சிக்கு செய்து உடல் மெலிந்து மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார்.

தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கன்னட நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்சிக்’ படத்தில் கியாராவை முக்கியமான வேடத்தில் பார்க்க முடியும்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரை காண உள்ளது. இதையடுத்து, புதுப்படங்களை ஏற்கத் தயாராக வருகிறார்.

இயக்குநர்களிடம் கதை கேட்கத் தயாராக இருப்பதாகவும் சவாலான வேடங்களை ஏற்க காத்திருப்பதாகவும் சிறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தன் விருப்பத்தைப் பகிர்ந்துள்ளார் கியாரா அத்வானி.

இவர் ராம் சரண் நடித்து சங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்ஜர்’, ‘வார் 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்