பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன்: ஹன்சிகா

1 mins read
e7ca9bd4-22a9-4e7a-b814-513a0854a610
நடிகை ஹன்சிகா கணவரிடமிருந்து பிரியப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - படம்: தமிழக ஊடகம்/ இன்ஸ்டகிராம்

நடிகை ஹன்சிகாவின் பெயரைக் கேட்டாலே அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் துள்ளிக் குதிக்கும்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர்.

நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022ஆம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். சோஹைல் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவர், ஹன்சிகா தோழியின் முன்னாள் கணவர் ஆவார். முதல் மனைவி உடன் ஏற்பட்ட விவாகரத்திற்குப் பிறகு அவர் ஹன்சிகாவை திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகு சோஹைல் வீட்டில் குடியேறினார் ஹன்சிகா.

அண்மையில் அவருக்குப் படங்கள் எதுவும் கைவசமில்லை.

இந்த நிலையில் தற்போது திருமண வாழ்விலும் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கணவர் சோஹைல் கத்தூரியாவை அவர் பிரிந்து வாழ்கிறார்.

இன்ஸ்டகிராமில் பதிவேற்றப்பட்ட கணவருடன் இருந்த புகைப்படங்களையும் அவர் நீக்கிவிட்டார்.

கடந்தவாரம் ஆகஸ்ட் 9ஆம் தேதி தனது பிறந்தநாளை ஹன்சிகா கொண்டாடினார்.

அப்போது, தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ஹன்சிகா, ‛‛இந்த ஆண்டு பல பாடங்களை வாழ்க்கை கற்றுத் தந்துள்ளது. எனக்கே தெரியாமல் எனது பலத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் உங்களின் வாழ்த்துகளால் என் இதயம் நிறைந்தது, நன்றி,” என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவின் மூலம் அவருடைய திருமண வாழ்க்கை மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்