அஜித்தின் 64வது படத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. மீண்டும் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்திலேயே நடிக்க உள்ளார் அஜித்.
இந்நிலையில், திடீர்ப் பயணமாக மலேசியா சென்றுள்ளார். அங்கு பத்துமலை முருகன் கோவில் நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார்.
முன்பு ‘குட் பேட் அக்லி’ படத்தை அஜித் ரசிகர்களை மட்டுமே மனத்தில் வைத்து இயக்கி இருந்தார் ஆதிக். இம்முறை அனைத்து தரப்பினருக்குமான படமாக தனது 64வது படம் இருக்க வேண்டும் என ஆதிக்கிடம் கூறியுள்ளாராம் அஜித்.
தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ஆதிக். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அஜித் எந்தெந்த உலக நாடுகளில் நடைபெறும் கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்கிறார் என்ற தகவலை கேட்டுப்பெற்று, அதற்கேற்ப படப்பிடிப்பு நடக்கும் இடங்களை அவர் இறுதி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த அஜித், மிக அருமையாக திட்டமிட்டுச் செயல்படுகிறீர்கள் என்று ஆதிக்கின் திட்டமிடுதலைப் பாராட்டித் தீர்த்துள்ளார்.
இந்நிலையில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள சூழலில், அதற்கு முன்னதாக அஜித் அங்கு சென்று வந்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

