தமிழ்த் திரைப்படத்தில் மலேசிய அமைச்சர்

தமிழ்த் திரைப்படத்தில் மலேசிய அமைச்சர்

படம்: perpaduan.gov.my

28 Nov 2026 - 2:27 pm

1 mins read

மலேசியாவில் உருவாக்கப்பட்ட திரைப்படத்தில் மலேசியத் துணை அமைச்சர் ஒருவர் சிறப்புக் காட்சியில் நடித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சரான யுனேஸ்வரன் ராமராஜ் இதில் நடித்துள்ளார்.

பதவியில் இருக்கும் ஒரு மலேசியத் துணை அமைச்சர் தமிழ்த் திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

புலனாய்வு, குற்றப் பின்னணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘இரும்புத் தோட்டம்’.

இப்படத்தில் திரு யுனேஸ்வரன் ராமராஜ் முதன்முதலாக நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

ஏ.வி.எல்.டி. புரோடக்‌ஷன் சார்பில் ஜெகன் ஜோன் பீட்டர் தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்தேவ் ஜெயகுமார் எழுதி இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்யின் ‘தி கோட்’, ‘ஜனநாயகன்’ படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற இர்ஃபான் ஜைனி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், லோகவர்மன் ஸ்ரீதரன், மேரி தாஷனி மேத்யூஸ், மோகன்ராஜ், துர்காஷினி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு மாணவியின் மர்மமான கொலையும் அதனைத் தொடர்ந்து வெளிவரும் பல்வேறு மர்மங்களும் படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளன. புலனாய்வு, குற்றப் பின்னணி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

டி.கே. தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சமேஷன் மணிமாறன் இசையமைத்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள ‘இரும்புத் தோட்டம்’ திரைப்படத்தை ஹாவென் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கே. கண்ணன் வெளியிடுகிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திஅமைச்சர்மலேசியாசினிமா