ஆனந்த் பால்கி இயக்கத்தில், சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் எப்போதோ வெளியீடு காணத் தயாராகிவிட்டது. ஆனால், சில காரணங்களால் படம் திடீரென முடங்கிவிட்டது.
இதுகுறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார் ஆனந்த் பால்கி.
“’சர்வர் சுந்தரம்’ திரைப்படம் சுடச்சுட அப்படியேதான் இருக்கிறது. படம் வெளிவரும். ஆனால் எப்போது வருமெனத் தெரியாது.
“சினிமாவே சவால்தான். அனைத்தையும் தாண்டி குதித்து, சவால்கள் அனைத்தையும் படம் வெளிவருவதற்கு முன்பே ‘சர்வர் சுந்தரம்’ பார்த்துவிட்டது.
“வானத்தை இலக்காகக் கொண்டால் கூரையைத் தொட்டுவிடலாம் என்று சொல்வார்கள். அதைப்போல என்னுடைய இலக்கும் உயரமாக இருந்தது.
“சந்தானத்தை அனைவரும ஒரு நகைச்சுவை நடிகராகவே பார்த்திருப்பீர்கள். ஆனால், அவருக்குள் அற்புதமான நடிகர் ஒளிந்துகொண்டிருக்கிறார். அந்த நடிகரை ‘சர்வர் சுந்தரம்’ வெளியே கொண்டுவரும்,” என்று ஆனந்த் பால்கி குறிப்பிட்டுள்ளார்.