சுந்தர் சி- விஷால் படத்தின் புதிய தகவல்

1 mins read
c1740716-6a80-435a-a65e-8b3a26a187a0
விஷால் நடிக்கும் படத்தை சுந்தர் சி. இயக்கவுள்ளார். - படம்: ஊடகம்

இயக்குநர் சுந்தர். சி, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 173வது படத்திலிருந்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே இதன் ‘புரோமோ ஷூட்’ நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படத்தில் தமன்னா நடிக்கவுள்ளார் என்பது ஓரளவு உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 5ஆம் தேதியன்று தொடங்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுந்தர் சி, தற்போது நயன்தாராவை வைத்து இயக்கியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் படப்பிடிப்புக்குப் பிந்திய வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திரஜினிகாந்த்

தொடர்புடைய செய்திகள்