தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிகில் முருகனுக்கு கலைமாமணி விருது

1 mins read
6c52718d-2800-40d3-9c3f-fe666b305d8a
ரஜினி, கமல்ஹாசனுடன் நிகில் முருகன். - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் நிகில் முருகனுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அளித்து கௌரவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக 575க்கும் மேற்பட்ட படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் நிகில் முருகன்.

1988ஆம் ஆண்டு தனது திரையுலகப் பயணத்தை தொடங்கிய அவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், இயக்குநர்கள் கே.பாலசந்தர், மணிரத்னம், சங்கர், பாலா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் போன்ற தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளையும் திறம்பட ஏற்பாடு செய்து பாராட்டுகளைப் பெற்ற இவர், ஒரே சமயத்தில் ரஜினி, கமல் இருவருக்கும் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றியவர்.

குறிப்புச் சொற்கள்