பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜித் இப்ரானை ஜனவரி மாதம் திருமணம் செய்யவிருந்த நிலையில், அந்தத் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் காதல் திருமண அறிவிப்பை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ், திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
அவர்களின் திருமணம் வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருந்த நிலையில், இந்தத் திடீர் ரத்து செய்தி புதன்கிழமை (டிசம்பர் 9) மாலை முதல் பரவி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் நின்றதற்கான அறிகுறியாக, நிவேதா பெத்துராஜும் ராஜித் இப்ரானும் தங்களது இன்ஸ்டகிராம் பக்கங்களிலிருந்து தாங்கள் ஒன்றாக இருந்த படங்களை நீக்கியுள்ளனர்.
மேலும், அவர்கள் இருவரும் இன்ஸ்டகிராமில் ‘அன்ஃபாலோ’ செய்துள்ளனர். இந்தச் செயல்கள் மூலம், அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் அவர்களின் திருமணம் நின்றுவிட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

