பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ வெளியீடு மீண்டும் தள்ளிவைப்பு

1 mins read
53fa0248-fd44-44b2-883c-9d5d23ff9337
‘எல்ஐகே’  படத்தில் பிரதீப் ரங்கநாதன். - படம்: இந்து தமிழ்

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்ஐகே’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்பட்ட ‘எல்ஐகே’ படம், திடீரென டிசம்பர் 18ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, டிசம்பர் 18ஆம் தேதியிலும் படம் வெளியாகாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘எல்ஐகே’ படத்தின் பணிகள் முடிவடைந்திருந்தாலும் ‘அவதார்’ போன்ற பெரிய படங்கள் வெளியாகவிருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் படத்தின் பொருள்செலவையும் கருத்தில் கொண்டு படக்குழு பின்வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி (காதலர் தினம்) படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரையரங்கு