‘மூன் வாக்’ திரைப்படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்

‘மூன் வாக்’ திரைப்படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்

படம்: தினமலர்

28 Nov 2026 - 3:47 pm

1 mins read

பிரபு தேவா, யோகி பாபு இணைந்து நடித்துள்ள ‘மூன் வாக்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இந்தக் காட்சியை வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) படக்குழுவினர் வெளியிட்டனர்.

நடன இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா, நடிகர் யோகி பாபு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மூன் வாக்’. இப்படத்தை, அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார்.

நடிகர்கள் அஜூ வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், நிஷ்மா, சுவாமிநாதன், சுஷ்மிதா, தீபா சங்கர் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்துடன், ‘மூன் வாக்’ படத்துக்கு இசையமைத்துள்ள முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.

இதையடுத்து, ‘மூன் வாக்’ திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்