இயக்குநர் ராஜீவ் மேனன் மீண்டும் இளையராஜா இசையில் படம் இயக்க உள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை 1’ திரைப்படத்தில் இவர் அரசு தலைமைச் செயலாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து, மேலும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்த போதிலும் அவற்றை ராஜீவ் மேனன் ஏற்கவில்லை.
‘விடுதலை 2’ படத்திலும் நடிக்க வேண்டியிருந்ததால் அதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் ‘விடுதலை 2’ படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.
“எனவேதான் சிறு ஓய்வுக்குப் பிறகு இளையராஜா இசையில் ஒரு படம் இயக்க விரும்புகிறேன். அதற்கான பணிகளை விரைவில் தொடங்க உள்ளேன்,” எனப் பேட்டி ஒன்றில் ராஜீவ் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

