சங்கர் இயக்கத்தில் உருவான ‘ஜென்டில்மேன்’, ‘சூரியன்’ படங்களைத் தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். தற்போது இவர் ‘ஜென்டில்மேன்’ படத்தின் 2ஆம் பாகத்தைப் புதுமுகங்களை வைத்து இயக்கி வருகிறார். இதோடு ‘ஜென்டில்மேன்’ படத்தை இலக்கமுறை தொழில்நுட்பத்திற்கு மாற்றி வருகிற டிசம்பர் 11ஆம் தேதி மறுவெளியீடு செய்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குஞ்சுமோன் கூறும்போது, “அக்காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் ‘ஜென்டில்மேன்’. 33 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து நான் தயாரித்த ‘காதல் தேசம்’, ‘ரட்சகன்’, ‘சூரியன்’ போன்ற படங்களையும் வெளியிட இருக்கிறேன் என்று கூறியுள்ளார் கே.டி.குஞ்சுமோன்.
இந்த மறுவெளியீடு முந்தைய தலைமுறையினருக்கு ஏக்கம் கலந்த நினைவுகளைத் தூண்டுவதுடன், புதிய தலைமுறையினருக்கு இப்படத்தின் காட்சி நேர்த்தியையும் இசையையும் பெரிய திரையில் அனுபவிக்கும் வாய்ப்பையும் வழங்கும் என்று நம்புகிறேன். ‘ஜென்டில்மேன் 2’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் தொடங்கும்” என்றார்.
