‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடலைப் பயன்படுத்த, அதன் தயாரிப்புத் தரப்பு அவருக்கு ரூ.50 லட்சம் வழங்க முன்வந்துள்ளது.
இதையடுத்து, அப்படத்துக்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கை இளையராஜா திரும்பப் பெற்றார்.
முன்னதாக, இளையராஜா வழக்கு தொடுத்ததை அடுத்து, ‘டியூட்’ படத்தின் ஓடிடி வெளியீட்டிலும் வழக்கின் தாக்கம் இருக்கும் எனக் கருதியதால், படத் தயாரிப்பு நிறுவனம், இந்த விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தது.
இதையடுத்து, இரு தரப்பினரும் சமசரசத்துக்கு முன்வந்துள்ளதால் வழக்கை முடித்து வைத்து நீதிபதி என்.செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே, ‘டியூட்’ படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ரூ.50 லட்சம் தந்தது.
இதன் மூலம் அப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்த அவரது அனுமதி கிடைத்துள்ளது.

