சமுத்திரக்கனி மீண்டும் இயக்குநராகிறார்

1 mins read
099ae25d-bebc-49d3-8a50-5cf410a59c5e
சமுத்திரக்கனி - படம்: ஊடகம்

இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி அண்மையில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் சுறுசுறுப்பாக நடித்து வந்தார்.

நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான ‘வினோதய சித்தம்’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் படத்தை இயக்கவுள்ளார்.

அதன்படி, அண்மையில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியைச் சந்தித்து புதிய படத்திற்கான கதையைக் கூறியுள்ளார் சமுத்திரக்கனி.

இந்தப் படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது எல்லாம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே சமுத்திரக்கனி தெலுங்கில் பவன் கல்யாண், நானி போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாஇயக்குநர்

தொடர்புடைய செய்திகள்