‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் மதுரையில் தொடங்க உள்ளதாக அப்படத்தின் நாயகன் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிறது `அரசன்’ படம்.
சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோர் நடிக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். பின்னர், முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அனிருத்தின் பிறந்தநாளன்று ‘அரசன்’ விளம்பரக் காணொளி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிசம்பர் 9ஆம் தேதி முதல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதாக சிம்பு தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, “வழக்கம்போல் உங்கள் அன்பும் ஆதரவும் தொடரும் என நம்புகிறேன். மலேசியாவில் இருந்து நேராக மதுரை சென்று படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன்,” என்றார்.

